Kural

திருக்குறள் #342
குறள்
வேண்டின்உண் டாகத் துறக்க; துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல
குறள் விளக்கம்
இவ்வுடல் வாழ்வில் ஓருயிருக்கு பேரின்பமானது தோன்ற (உணரப்பட) வேண்டுமானால், அவ்வுயிர் நிலையாமையை உணர்ந்து புறப்பற்றையும் அகப்பற்றையும் அறவே துறக்க வேண்டும். அவ்வாறு துறந்த பிறகு மெய்யுணர்வால் உணரப்படும் பேரின்பம் எல்லையற்றதாகும்.