குறள்
மற்றும் தொடர்ப்பாடு எவங்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை
குறள் விளக்கம்
பிறவிகளிலிருந்து விடுபடும் முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு பிறவிகளை நீக்குவதற்குப் பெருந்துணைபுரியும் உடலும் கூட சுமையாகும். வேறு தொடர்புடைய பொருள்கள் இருக்குமா என்ன? (இருக்காது என்பது கருத்து).