Kural

திருக்குறள் #348
குறள்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்
குறள் விளக்கம்
(பொருள்கள், பருவுடல், நுண்ணுடல் (உள்ளம்), இம்மூன்றிலும் பற்றை நீக்கி) முழுமையாக அவற்றிலிருந்து (அறிவால்) விடுபட்டவர்(ரே) (வீட்டின்பத்தை) நன்கு பெற்றவராவர். இதற்கு மாறானவர் (முற்றத் துறவாதவர்) (அறியாமையால் பொருள் –- பருவுடல் – நுண்ணுடல் இம்மூன்றிலும் பற்றுக்கொண்டு) மயக்கமுற்று பிறப்பு – இறப்புத் தொடராகிய வலையில் சிக்குண்டவராவர்.