மெய் உணர்தல்
குறள் # 351
பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு
குறள் # 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசுஅறு காட்சி யவர்க்கு
குறள் # 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து
குறள் # 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயன்இன்றே மெய்உணர்வு இல்லா தவர்க்கு
குறள் # 355
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
குறள் # 356
கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றுஈண்டு வாரா நெறி
குறள் # 357
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு
குறள் # 358
பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும் செம்பொருள் காண்பது அறிவு
குறள் # 359
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்
குறள் # 360
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்

