ஈகை
குறள் # 221
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து
குறள் # 222
நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்எனினும் ஈதலே நன்று
குறள் # 223
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள
குறள் # 224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு
குறள் # 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்
குறள் # 226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி
குறள் # 227
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது
குறள் # 228
ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்துஇழக்கும் வன்க ணவர்
குறள் # 229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்
குறள் # 230
சாதலின் இன்னாதது இல்லை; இனிதுஅதூஉம் ஈதல் இயையாக் கடை

