குறள்
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
குறள் விளக்கம்
பசியைப் பொறுத்துக்கொள்ளும் வல்லமையே தவ வலிமையுடையோரின் (சிறந்த) வல்லமையாகும். அவ்வல்லமை (பொறுத்துக்கொள்வதற்கு கடினமான) அந்தப் பசியை (ஈதலினால்) நீக்குவோரது வல்லமைக்குப் பிற்பட்டதாம்.