குறள்
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்
குறள் விளக்கம்
(பொருள் குறைந்து விடாமல் மேலும் மேலும்) பொருளைச் சேர்க்க விரும்பி (பொருளற்றவர்க்கு பகிர்ந்தளிக்காமல்) தான் மட்டுமே உண்ணுதல் (அநுபவித்தல், ஒருவனுக்கு) (பிறரிடம் சென்று ஏதேனும் ஒன்றைக் கெஞ்சிக்) கேட்டுப் பெறுவதைக் காட்டிலும் உறுதியாக துன்பம் தருவதாகும்.