புறங்கூறாமை
குறள் # 181
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது
குறள் # 182
அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே புறன்அழீஇப் பொய்த்து நகை
குறள் # 183
புறம்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல் அறம்கூறும் ஆக்கம் தரும்
குறள் # 184
கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல்
குறள் # 185
அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும் புன்மையால் காணப் படும்
குறள் # 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப்படும்
குறள் # 187
பகசொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்
குறள் # 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு
குறள் # 189
அறன்நோக்கி ஆற்றுங்கால் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை
குறள் # 190
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு

