குறள்
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு
குறள் விளக்கம்
தம்முடன் நெருங்கிப் பழகுபவர்களுடைய குறைகளையும், (அவர்களில்லாத போது பலரும் அறிய)த் தூற்றிப் பேசுகின்ற தன்மையுடையவர்கள் தொடர்பில்லாதவர்களைப் பற்றிப் பேசுவது எப்படிப்பட்டதாக இருக்குமோ?