குறள்
அறன்நோக்கி ஆற்றுங்கால் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை
குறள் விளக்கம்
ஒருவனில்லாத நேரம் பார்த்து அவனைப் பற்றி கீழ்மையான சொற்களைக் கூறுகின்றவனுடைய உடல் சுமையை பூமியானது இக்கொடிய பொருளைச் சுமப்பதே தனக்கு அறமென்று எண்ணி சுமந்து கொண்டுள்ளது போலும்!