குறள்
அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும்
குறள் விளக்கம்
(ஒருவன்) அறத்தைப் பற்றி நல்லதென்று கூறும் மனமுடையவனாகத் (தோன்றினாலும்), (அவனது உள்ளத்தின் ஆழத்தில்) அறம் ஆழ்ந்து இல்லை (என்பதை) (அவனது) புறம் பேசும் புல்லிய (கீழான) குணத்தால் உணர்ந்து கொள்ளலாம்.