Kural

திருக்குறள் #180
குறள்
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு
குறள் விளக்கம்
ஒருவன் பின்விளைவை உணராமல் பிறரது பொருளைக் கவர விரும்புவானானால் அவ்விருப்ப எண்ணம் அனைத்து நிலைகளிலும் அழிவை உண்டாக்கிவிடும். பிறரது பொருளை விரும்பாமை என்கிற நற்பண்புப் பெருமிதச் செல்வம் அனைத்து நிலைகளிலும் வெற்றியாகிய மேன்மையை அருளிச்செய்துவிடும்.
குறள் விளக்கம் - ஒலி