குறள்
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
குறள் விளக்கம்
அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வாயிலாக உள்ள இல்லறநெறியில் நிற்பவன் பிறரது பொருளை விரும்பி அதற்குரிய வஞ்சக வழிகளை நினைத்தால் அறத்தின் பயனை அடையாமல் அழிந்து போவான்.