குறள்
இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மைஇல் காட்சி யவர்
குறள் விளக்கம்
புலன்கள் ஐந்தினையும் நெறிப்படுத்தி வெற்றி பெற்ற குறைகள் இல்லாத தெளிந்த அறிவாகிய பார்வைகளை உடையவர்கள், தனக்குப் பொருளில்லை என்ற காலத்திலும் பிறரது பொருளைக் கவர விரும்பும் எண்ணத்தை அடைய மாட்டார்கள்.