குறள்
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
குறள் விளக்கம்
நடுவு நிலைமையாகிய அறத்தைப் போற்றிப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், பிறர் அறவழியில் முயன்று அடைந்த பொருளைக் கவர விரும்பினால், அந்த விருப்ப எண்ணம் அவனுடைய குடும்பத்தைக் கெடச்செய்து மேலும் பல தவறுகளை அப்போதே செய்துவிடும்.