Kural

திருக்குறள் #155
குறள்
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து
குறள் விளக்கம்
பிறர் தமக்குத் தீமை செய்தபோது பொறுக்காமல் அவனைத் தண்டித்தவரை அறிவுடையார் சிறந்த மக்களுள் ஒருவராக மனதில் பதித்திக்கொள்ள மாட்டார். அத்தீமையைப் பொறுத்தவரை தங்கத்தை மதிப்பதுபோல பாதுகாத்து மனதில் பதித்திக் கொள்வார்கள்.
குறள் விளக்கம் - ஒலி