Kural

திருக்குறள் #151
குறள்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
குறள் விளக்கம்
தன்னைத் தோண்டுபவரை வீழாமற் சுமக்கும் நிலத்தைப் போல தன்னை இகழ்ந்து பேசுபவரை பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான அறமாகும். உயர்ந்த புண்ணியமாகும்.
குறள் விளக்கம் - ஒலி