குறள்
பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று
குறள் விளக்கம்
பிறர் செய்த தீமையை எந்த நிலையில் இருந்தாலும் பொறுத்துக்கொள்வது நல்லது. அத்தீமையைத் தொடர்ந்து நினைக்காமல் அப்பொழுதே மறந்துவிடுவது பொறுத்துக்கொள்வதைக் காட்டிலும் சிறந்த அறமாகும்.