Kural

திருக்குறள் #1008
குறள்
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
குறள் விளக்கம்
(பிறருக்கு உதவாத காரணத்தால்) எவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வமானது ஊரின் நடுவில் (தீங்கை விளைவிக்கக்கூடிய) நஞ்சை உடைய மரம் பழுப்பதற்கு ஒப்பானது.