குறள்
அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்
குறள் விளக்கம்
(சுற்றத்தாரிடமும் நண்பர்களிடமும்) அன்பில்லாமல் தன்னையும் வருத்திக்கொண்டு வறியவருக்கு வழங்குதல் முதலான அறங்களைப் பற்றி எண்ணாமல், சேர்த்து வைக்கப்பட்ட பெருஞ்செல்வமானது பிறரால் அனுபவிக்கப்படும்.