குறள்
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்
குறள் விளக்கம்
(ஈட்டியப் பொருளை) பிறருக்கு வாரி வழங்குவதும் தாம் அனுபவிப்பதும் (ஆகிய இரண்டு செய்கைகளும்) இல்லாதவர்க்கு அடுக்கி வைக்கப்பட்ட கோடிக்கணக்கான பொருள் இருப்பினும் அதனால் பயன் இல்லை.