சூது
குறள் # 931
வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம் தூண்டீல்பொன் மீன்விழுங்கி யற்று
குறள் # 932
ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல் நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு
குறள் # 933
உருள்ஆயம் ஊவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்
குறள் # 934
சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின் வறுமை தருவதுஒன்று இல்
குறள் # 935
கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்
குறள் # 936
அகடுஆரார் அல்லல் உழைப்பர் சூதுஎன்னும் முகடியால் மூடப்பட் டார்
குறள் # 937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்
குறள் # 938
பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது
குறள் # 939
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின்
குறள் # 940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்

