Kural

திருக்குறள் #933
குறள்
உருள்ஆயம் ஊவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்
குறள் விளக்கம்
ஊருள்கின்ற (கவற்றில் அகப்பட்ட) பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடுவானாயின், (அவனிடத்தில்) ஏற்கனவே உள்ள பொருளும் வருவாயும் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சென்று தங்கும்.