குறள்
பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது
குறள் விளக்கம்
சூதானது, (தன்னைப் பழகியவனின்) பொருளைக் கெடுத்து பொய்யை மேற்கொள்ளச் செய்து, அவனது நல்வினைப்பயனையும் கெடுத்து இம்மையிலும் மறுமையிலும் பெருந்துன்பத்தை அனுபவிக்கச் செய்யும்.