இகல்
குறள் # 851
இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்
குறள் # 852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னா செய்யாமை தலை
குறள் # 853
இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும்
குறள் # 854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்
குறள் # 855
இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர்
குறள் # 856
இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து
குறள் # 857
மிகல்வேல் மெய்ப்போஉள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர்
குறள் # 858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு
குறள் # 859
இகல்காணான் ஆக்கம் வரும்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு
குறள் # 860
இகலான்ஆம் இன்னாத எல்லாம் நகலான்ஆம் நல்நயம் என்னும் செருக்கு

