பகை மாட்சி
குறள் # 861
வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக; ஓம்பா மெலியார்மேல் மேக பகை
குறள் # 862
அன்புஇலன் ஆன்ற துணைய்லன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு?
குறள் # 863
அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு
குறள் # 864
நீங்கான் வெகுளி நிறைஉலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது
குறள் # 865
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்புஇலன் பற்றார்க்கு இனிது
குறள் # 866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்
குறள் # 867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து மாணாத செய்வான் பகை
குறள் # 868
குணன்இலனாய்க் குற்றம் பலஆயின் மாற்றார்க்கு இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து
குறள் # 869
செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலா அஞ்சும் பகைவர்ப் பெறின்
குறள் # 870
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி

