Kural

திருக்குறள் #851
குறள்
இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
குறள் விளக்கம்
எல்லா உயிர்களுக்கும் (பிற உயிர்களுடன்) கூடாமை என்னும் தீய பண்பை வளர்க்கும் குற்றமாக விளங்குவது, (பகைமை கொள்ளுதலாகிய) மாறுபாடு என்று நூலோர் கூறுவர்.