Kural

திருக்குறள் #859
குறள்
இகல்காணான் ஆக்கம் வரும்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு
குறள் விளக்கம்
நன்மை வரும் காலத்தில் (காரணம் இருப்பினும்) பிறரிடத்தில் பகைமை கொள்ளமாட்டான். தீமை ஏற்படும் காலத்தில் அந்தப் பகைமையை (காரணம் இல்லாவிட்டாலும்) மேன்மேலும் வளர்க்க நினைப்பான்.