Kural

திருக்குறள் #856
குறள்
இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து
குறள் விளக்கம்
பிறரோடு மாறுபடுவதால் வெற்றிபெறுதல் இனிது என்று எண்ணுபவனுடைய வாழ்க்கையானது, தவறிப்போவதும், முழுவதும் கெடுவதும் விரைந்து நடக்கக்கூடியவையாகும்.