Kural

திருக்குறள் #852
குறள்
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னா செய்யாமை தலை
குறள் விளக்கம்
(வேறொருவன்) தன் மீது பொருந்தாத எண்ணம் கொண்டவனாய், வெறுக்கக்கூடியவற்றைச் செய்தாலும், அந்த மாறுபாட்டை எண்ணி, (தான் அவனுக்குத்) துன்பம் தரக்கூடியவற்றை செய்யாதிருத்தல் உயர்ந்த பண்பாகும்.