குறள்

காலம் அறிதல்
குறள் # 481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
குறள் # 482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு
குறள் # 483
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்?
குறள் # 484
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்
குறள் # 485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்
குறள் # 486
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து
குறள் # 487
பொள்ளென ஆங்கே புறம்வேரார், காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
குறள் # 488
செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை
காணின் கிழக்காம் தலை
குறள் # 489
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்
குறள் # 490
கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து