வெகுளாமை
குறள் # 301
செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்?
குறள் # 302
செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற
குறள் # 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய பிறத்தல் அதனான் வரும்
குறள் # 304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற?
குறள் # 305
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்
குறள் # 306
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்
குறள் # 307
சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
குறள் # 308
இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று
குறள் # 309
உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்
குறள் # 310
இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை

