Kural

திருக்குறள் #301
குறள்
செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
குறள் விளக்கம்
தன்னுடைய கோபம் அதற்குரிய பயனைத் தருமிடத்தில் (தன்னைக்காட்டிலும் தவ வலிமை குறைந்தவரிடத்தில்) அக்கோபத்தை எழாதவாறு அறிவின் துணைகொண்டு தடுத்துத் தன்னைத் தவத்தால் பாதுகாத்துக் கொள்பவன் அருட்தவத்தோடு கூடிய அறிவினால் தன்னை நன்கு பாதுகாத்துக் கொண்டவனாவான். கோபம் எடுபடாதவிடத்துத் தன்னைக் காட்டிலும் தவ வலிமை மிக்கவரிடத்தில் அக்கோபத்தினைத் தடுத்துப் பயனென்ன? தடுக்காவிட்டால் பயன் என்ன?
குறள் விளக்கம் - ஒலி