குறள்
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
குறள் விளக்கம்
(துறவிகளுக்கு அருளோடு இணைந்த மெய்யறிவால் விளைகின்ற) முகமலர்ச்சியாகிய சிரிப்பையும் அக மலர்ச்சியாகிய மகிழ்வையும் அழிக்கின்ற ஆற்றல் மிக்க கோபத்தைக் காட்டிலும் வேறு ஏதேனும் பகை இருக்கப்போகிறதா, என்ன?