குறள்
சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
குறள் விளக்கம்
கோபத்தை, தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு பண்பென்று தவறாகக் கருதி அதனை உடைமை போலக் கொண்டவன் அடையும் கெடுதலானது, எத்தகையதென்றால் தரையில் கையினை ஓங்கி அடித்தவனைப் போல துன்ப்பப்படுவதிலிருந்து தப்ப முடியாது.