Kural

திருக்குறள் #308
குறள்
இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
குறள் விளக்கம்
பல பெரும் பொறிகளைக் கொண்ட பெருந்தீ தன்மீது பொழிவது போன்ற துன்பம் தரும் செயல்களை ஒருவன் தனக்குச் செய்தாலும் அவனிடத்தில் கோபப்படாமலிருத்தலை துறவு வாழ்வை மேற்கொண்டவன் கடைப்பிடிப்பானேயானால் அது நன்மையைத் தரும்.
குறள் விளக்கம் - ஒலி