Kural

திருக்குறள் #305
குறள்
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
குறள் விளக்கம்
உயிர் தன் உள்ளத்தைத் துன்பம் வராமல் பாதுகாத்துக்கொள்ள விரும்பினால் மனதில் உருவாகும் கோப உணர்ச்சியை அருளறிவின் துணைகொண்டு பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாக்கத் தவறினால் அக்கோபமானது தன் உள்ளத்தையே, துன்பத்தைத் தந்து உள்ளத்தின் அமைதியை அழித்துவிடும்.
குறள் விளக்கம் - ஒலி