பெருமை
குறள் # 971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை; இளிஒருவற்கு அஃதுஇறந்து வாழ்தும் எனல்
குறள் # 972
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்
குறள் # 973
மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும் கீழ்அல்லார் கீழ்அல் லவர்
குறள் # 974
ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு
குறள் # 975
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்
குறள் # 976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு
குறள் # 977
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான் சீரல் லவர்கண் படின்
குறள் # 978
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து
குறள் # 979
பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்
குறள் # 980
அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான் குற்றமே கூறி விடும்

