குறள்
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
குறள் விளக்கம்
பெருமை என்னும் பண்பை உடையவர் சிறப்பு உண்டாகிய காலத்திலும் செருக்கில்லாமல் அடக்கத்துடன் நடந்துகொள்வர். (அதற்கு மாறாக) சிறுமையை உடையவர் தன்னைப் பெரிதாக எண்ணி வியந்து பாராட்டிக் கொள்வர்.