குறள்
மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழ்அல் லவர்
குறள் விளக்கம்
செயற்கறிய செயல்களைச் செய்யாதவர் (தகுதியில்லாதவர்) செல்வம், பதவி போன்றவற்றில் மேல்நிலையில் இருந்தாலும் (அவர்) உயர்ந்தவர் அல்லர். செயற்கரிய செயல்களைச் செய்யக்கூடிய தகுதி மிக்கவர்கள் செல்வம், பதவி போன்றவற்றில் கீழ்நிலையில் இருந்தாலும் தாழ்ந்தவர் அல்லர்.