Kural

திருக்குறள் #972
குறள்
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
குறள் விளக்கம்
மனித உடல்களில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையை உடையது. செய்கின்ற தொழில்களின் வேறுபாட்டால் (பெருமை, சிறுமை ஆகிய) சிறப்பியல்புகள் ஒரே தன்மையை உடையவை அல்ல.