Kural

திருக்குறள் #976
குறள்
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு
குறள் விளக்கம்
அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கும் பெரியோர்களைப் போற்றி வணங்கி அவர் வழிநடந்து, அவர்களுடைய மேலான இயல்புகளை அடைவோம் என்ற எண்ணமானது, சிறுமை ள்ளம் அறிவிலிகளின் மனதில் இருப்பதில்லை.