குறள்
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு
குறள் விளக்கம்
(ஒருவன்) தன்னை அழித்துக்கொள்ள எண்ணினால், எண்ணியதை எண்ணியவாறு செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவரிடம், குற்றத்தைச் செய்வானாக். (ஒருவன்) தான் கெட விரும்பினால், நீதிநூல் கூற்றையும் பெரியோரின் கூற்றையும் செவிமடுக்காமல் செயலில் இறங்குவானாக.