Kural

திருக்குறள் #896
குறள்
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம், உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
குறள் விளக்கம்
நெருப்பால் சுடப்பட்டாலும், (ஒருவன்) உயிர் பிழைத்துவிடலாம். (ஆனால்) அறிவிலும் ஒழுக்கத்திலும் தவத்திலும் சிறந்த பெரியாரை இகழ்ந்து நடந்து, அவரிடத்தில் பிழை செய்பவர், உயிர் பிழைக்க மாட்டார். நல்ல கதியை அடைய மாட்டார்.