பகைத்தீறம் தெரிதல்
குறள் # 871
பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று
குறள் # 872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்ஏர் உழவர் பகை
குறள் # 873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்
குறள் # 874
பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு
குறள் # 875
தந்துணௌ இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று
குறள் # 876
தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறா பகாஅன் விடல்
குறள் # 877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து
குறள் # 878
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு
குறள் # 879
இளைதுஆக முள்மரம் கொல்க; களையுநர் கைகில்லும் காழ்த்த இடத்து
குறள் # 880
உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்

