Kural

திருக்குறள் #878
குறள்
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு
குறள் விளக்கம்
போர் செய்யும் முறைகளை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு நன்கு தற்காத்துக்கொண்டால் பகைவரிடத்தில் ஏற்பட்ட படைப்பெருக்கம் முதலிய பெருமைகள் யாவும், தானே அழியும்.