குறள்
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்புஇலன் பற்றார்க்கு இனிது
குறள் விளக்கம்
பகை வந்த காரணத்தை அறியாமலும் பகையைத் தடுக்கும் வாய்ப்புக்களை மேற்கொள்ளாமலும் பழிக்கு அஞ்சாமலும் நற்பண்புகள் இல்லாதவனாகவும் (இருப்பவன்) பகைவரால் எளிதில் வெல்லக்கூடியவனாவான்.