குறள்
வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக; ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
குறள் விளக்கம்
தன்னைக் காட்டிலும் வலிமை மிகுந்தவரிடத்தில் பகைமை கொண்டு எதிர்த்துப் போரிடலை விட்டுவிட வேண்டும். தம்மைக் காட்டிலும் வலிமை குறைந்தவரிடத்தில் பகை கொள்ளுதலை விட்டுவிடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.