குறள்
நாடாது நட்டலின் கேடுஇல்லை; நட்டபின்
வீடுஇல்லை நட்பாள் பவர்க்கு
குறள் விளக்கம்
நட்பினை விரும்பி அதில் நிலைத்து நிற்பவர்களுக்கு ஒருவனோடு நட்புக் கொண்டபின்பு அந்த நட்பினை விட்டுவிடுதல் என்பது ஏற்படாது. ஆகையால் நட்பை ஆரய்ந்து அறியாமல் நட்புக் கொள்வது போல தீமையைத் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.