அரண்
குறள் # 741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள்; அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள்
குறள் # 742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண்
குறள் # 743
உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல்
குறள் # 744
சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண்
குறள் # 745
கொளற்குஅரியதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்குஎளிதாம் நீரது அரண்
குறள் # 746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும் நல்லாள் உடையது அரண்
குறள் # 747
முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் பற்றற்கு அரியது அரண்
குறள் # 748
முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிப் பற்றியார் வெல்வது அரண்
குறள் # 749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறுஎய்தி மாண்டது அரண்
குறள் # 750
எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண்

